________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 22 22 சொல்லுகின்ற காரணத்தால் ஏதோ வேண்டுமென்றே அர சுக்கு விரோதமாகச் சொல்லுகின்ற கருத்துக்கள் என்று எடுத் துக் கொள்ளாமல் அவைகளை மறுபரிசீலனை செய்யப் பொறுப்பிலே உள்ளவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு முதல்வர் இருக்கிறார். உங்கள் நியாயமான கோரிக்கைகளைக் கேட் டுப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. கல்லூரி முதல்வர் நல்லெண்ணம் படைத்தவராக, தமிழ்க்குடிமகனாக இருக்கிற காரணத்தால் நிச்சயம் அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்றும் ஆர்வம் படைத் தவராக இருப்பார். அதுதான் நிலை. அதுபோலத்தான் பொறுப்பில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எழுகின்ற கோரிக்கை எங்கிருந்து எழுகின்றது என்று பாராமல் 'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற அந்தக் குறளின் அடிப்படையில் ஆராய்ந்து நீதி வழங்கத் தயாராக இருக்கவேண்டும். இன்று தமிழ்க்குடிமகனுக்கு ஏற்பட்டிருக்கிற நிலை என்ன? நான் கல்லூரி முதல்வரைச் சொல்லவில்லை. தமிழ்ச் சமுதாயத்தைச் சொல்லுகிறேன். எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தோடு -கேள்விக் குறியோடு இருக்கிறார்கள். அவன் எடுத்து வைத்திருக்கிற ஒவ்வொரு அடியிலும் நெருஞ்சிமுள் குத்துகிறது. அடுத்த அடி வைத்தால் கருவேல் முள் குத்துகிறது. அதற்கு அடுத்த அடி வைத்தால் ஈட்டியோ, வேலோ, வாளோ குத்தும் என்கிற அளவுக்கு அவனுடைய எதிர்காலம் சிக்கலாகிக் கிடக்கிறது. இதற்கு ஒரு மாற்றுத் தேவை. இதற்கோர் வழிபிறந்தாக வேண்டும். தமிழ்க்குடி மகன் காப்பாற்றப்பட வேண்டும்