உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 கலைஞர் மேல் காதல் கொண்டேன் என்ற சூளுரையை மேற்கொள்ள வேண்டியது இன்றைய மாணவர்களாகிய உங்கள் கடமையாகும். உ இதை நான் பேசுகிற காரணத்தாலேயே யாதவர் கல்லூ ரிக்குக் கருணாநிதி வந்தான்; மாணவர்களைத் தூண்டிவிடும் காரியத்தைச் செய்தான் என்று யாராவது சொல்வார்களே யானால் நான் இங்கே ஆற்றும் உரை உங்களைத் தூண்டிவிடு வதற்காக அல்ல. யாரையும் உணர்ச்சி வசப்பட்டுத் தகாத காரியங்களில் ஈடுபடச் செய்வதற்காக அல்ல. சிந்தித்தாலே போதும். மாணவர்கள் சிந்தித்தாலே மற்றவர்கள் செயல்படு வதற்குச் சமானமாகும். எனவே நீங்கள் சிந்தித்தால் போதும். செயல்பட நாங்கள் இருக்கிறோம். நீங்கள் சிந்திக்க மறந்து விடுவீர்களானால், எதிர்காலம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர மறந்து விடுவீர்களா னால், நாம் படிக்கிறோம் - நம் குடும்பம் வாழுகிறது என்ற அந்த எண்ணத்தோடு உங்கள் நிலையை நிறுத்தி விடுவீர்களா னால், நமக்குப் பிறகு நம்முடைய எதிர்காலச் சமுதாயம், நம்முடைய சந்ததியினர் என்ன ஆவார்கள் என்பதைப் பற் றிய எண்ணத்தை அறவே விட்டு விட்டோம் என்ற பழிக்கு ஆளாவோம்.