இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 24 நம்பிக்கைக்குரிய... திருச்சித் தேவர் மன்றத்தில் தலைவர் கலைஞர் அவர் கள் கலந்து கொண்ட நூல்வெளியீட்டு விழா. நூலை வெளி யிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள். சின்னத்தாராபுரம் சி.இறையரசன் எழுதிய 'குறளும் பொரு ளும்' எனும் நூலைப் படித்துத் திறனாய்வுரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய உரையிலிருந்து ஒரு பகுதி. ש நான் இப்போது 'குறளோவியம்' எனும் பெயரில் குறளுக்கு விளக்கவுரை எழுதி வருகிறேன். நான் எழுதிய எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டு மென்ற தேவையில்லை. குறளோவிய உரையில் குறையிருப் பதாகக் கருதி நமது தமிழ்க்குடிமகனைப் போன்ற நம்பிக் கைக்குரிய பேராசிரியர்கள் ஓர் அஞ்சலட்டையில் எழுதிப் போட்டால்கூட நான் திருத்திக் கொள்ளத் தயார்.'