25 கலைஞர் மேல் காதல் கொண்டேன் நாளைய வரலாறு நமக்காக! (மதுரை எட்வர்டு மன்றம் பாரதி நூற்றாண்டு விழா வைச் சிறப்பாகக் கொண்டாடியது. அதன் செயலர் திரு. பழநிக் குமாரசாமி அவர்கள் தலைவர் கலைஞர் அவர்க ளைக் கவியரங்கத் தலைமை தாங்க அழைத்திருந்தார். கவி ஞர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்துப் பங்குபெறச் செய்யும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. கவிஞர்களும் தக்க கவிதைகளுடன் வந்துவிட்டனர். தலைவர் கலைஞர் அவர் கள் கடுமையான சுற்றுப்பயணம் காரணமாகக் கவிதை எழுத நேரமில்லாது போய்விட்டது. காலை 11 மணிக்குத்தான் நான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட் டது. தலைவர் கலைஞர் அவர்களை வைத்துக்கொண்டு கவியரங்கத் தலைமையா! ஓர் இனம்புரியாத அச்சம்! கிறுகி றுப்பு! என்றாலும் தலைவர் கட்டளையாயிற்றே! அப்படிக் கலந்து கொண்டபோது தலைவர் கலைஞர் அவர்களைக் குறித்து நான் பாடிய வரிகள்.23.6.1982) கோட்டையிலே உன்றன் கொடிபறந்த காலத்தில் பாட்டை அறிந்த பலர் பாடிக் குவித்திருந்தார் ஏட்டை அறிந்தவுடன் தூவல்தனை எடுத்து எழுதிக் குவித்தவர்கள் எத்தனையோ பேர்உண்டு.
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/26
Appearance