உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் கலைஞர் பெயராலே தொகுப்புக் கவிதைகளும் கணக்கின்றி வந்துள்ள காலத்தை நானறிவேன் சிறிய இலக்கியங்கள் இவையென்று கூறுகின்ற நெறியில் உனைப்புகழ்ந்தோர் எத்தனையோ எத்தனையோ கலைஞர் உலாவென்றும் காவியம் இது என்றும் மும்மணிக் கோவை என்றும் நூறாண்டு வாழ்க என்றும் முத்தாரம் சூட்டி முழுதும் உனைவாழ்த்திப் பிள்ளைத் தமிழ் பாடிப் பெருமை உனக்காக்கித் தங்கள் புகழ்வளர்த்துத் தங்கட்கொரு வாய்ப்பைப் பெற்றுச் சிறந்தவர்கள் பெயரை எடுத்தவர்கள் பன்னூறு பேராம்; பார்த்தேன் அவர்களையும் ஆனாலும் சில்லோர் அன்றைக்கும் உதட்டளவில் வீணான சொல்லுதிர்த்து மேடைப் புகழ்பெற்று வாழ்வு கிடைக்கும் வரை வாய்ப்பைப் பிடித்திருந்து சற்றுச் சரிவுனக்கு வந்துவிட்ட தெனவறிந்து கூடாரம் மாற்றியிங்கு கூறியதையே கூறி ஏடாயிரம் எழுதி ஏய்க்கின்றார்; என்செய்வேன்! நன்றி மறந்தவர்கள் வாழ்ந்தாலும் நீ அரசன் அன்றைக்கே அந்த உதவிகளை மறந்து விட்டாய் காரணம் நானறிவேன், கலைஞர் சிறப்பறிவேன் கைம்மாறு வேண்டாத கடப்பாடு கொண்டவன் நீ வானமழை போல வான்புகழைப் பெற்றவன் நீ குறளோ வியம்தீட்டிக் கோடானு கோடி உள்ளம் கொள்ளைகொண்ட பேரறிஞன்; இன்றுவரை திரையுலகில் உன்னதுபோல் துடிப்புடைய உரையாடல் வந்ததில்லை கனல்கக்கும் வசனத்தைக் கருணாநிதித் தமிழன் எழுதியது போலெவரும் இதுவரைக்கும் எழுதவில்லை ய 26