27 22 கலைஞர் மேல் காதல் கொண்டேன் அந்த உரையாடல் அருங்கலைஞன் சிவாஜியின் சந்தக் குரலில் இணைந்து வரும்போது கேட்டவர்கள் கிறுகிறுத்தார்; என்றும் நினைத்திருப்பார் அதைக்கூடக் குறைசொல்லும் அன்பர் சிலரிருப்பார்; கிறுக்குப் பிடித்த அந்தக் கீழ்களைஏன் சிந்திக்க? மற்றவர்போல் நான்புகழ்ந்து ஏதோ ஒரு வாய்ப்பில் பற்றுவைத்த குற்றத்தை நான்புரியப் போவதில்லை (நீ) ஆளுகின்ற காலத்தில் அருகில் நான்வந்ததில்லை முடிசூடா மன்னனென மூவுலகும் போற்றுகையில் பக்கத்தில் வாராமல் பார்த்துக் களித்தவன்நான் ஓரத்தில் நின்றவனை உன்னருகே கொண்டுவந்து பாடி வழுத்திடவும் பார்த்துக் களித்திடவும் செய்ததெது சொல்விடுவேன்; கேட்போர்கள் சிந்திக்க! பலபத்து ஆண்டுகளாய்ப் பாதையினை மாற்றாமல் நிற்கின்ற ஒன்றே நின்னருகில் தள்ளியது! உண்மைக் கலைஞன்நீ! உன்புகழை என்றும் பூம்புகார் பேசும், புறத்திலே உன்பெயரைப் பொறிப்பதற்கு முடியாமல் போனாலும் நாளைக்கு வள்ளுவர் கோட்டம் உன்பெயரே சொல்லிநிற்கும் உண்மைத் தமிழ்க்குருதி ஓடுகின்ற காரணத்தால் சொல்ல நினைக்கின்றேன்; சொற்றமிழில் வல்லவனே! நாளை வரலாறு நமக்காகக் காத்திருக்கும் வேளை வருமட்டும் விழிப்போடு நாம் உழைப்போம்!
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/28
Appearance