________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 28 88 பாண்டித்துரைத் தேவர் படத்திறப்பு ஈழத் தமிழர் சிக்கல் மேலோங்கி நின்ற காலம். இலங் கையில் கண்டி, நுவரேலியா, கொழும்புப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட் டுப் பல நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக ஓடி வந்த வேளை. இந்த நேரத்தில் இராமநாதபுரத்தில் தி.மு.கழக மாநாடு நடைபெற்றது. கல்லூரி முதல்வராக இருந்த நான் இந்தக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழுக்குத் தொண்டு செய்த பாண்டித்துரைத் தேவர் படத்தைத் திறந்து வைத்துப் பேசினேன்.எனக்குப் புகழ் சேர்த்த பேச்சு அது. நான் பேசி முடித்துவிட்டு என் இருக்கைக்குத் திரும்பிய போது தலைவர் அவர்கள் ஒன்றிரண்டு வரிகளில் என்னை வெகுவாகப் பாராட்டினார். 'இலங்கைத் தமிழர் சிக்கல் என்றாவது ஒருநாள் தீர்ந்து விடும்; ஆனால் உங்கள் பேச்சின் சிறப்பு என்றும் அழியாது என்ற வரிகள் என் வாழ்நாள் முழுவதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.