________________
29 கலைஞர் மேல் காதல் கொண்டேன் கலைஞரின் கவிதைகள் (தலைவர் கலைஞர் அவர்களது மணிவிழாவின் போது எழுதப் பெற்றது - 1984) உள்ளத்துள்ளது கவிதை - நெஞ்சில் ஊற்றெடுப்பது கவிதை”என்று கவிதையின் பொது இயல்பு பற்றிக் கூறுவார்கள். கவிதைக்குள் அடங்கும் கருத்து, வடிவம், உணர்ச்சி கற்பனை ஆகிய நான்கினையும் வைத்துக் கொண்டுதான் அந்தக் கவிதையின் தரம் என்ன என்பதை வரையறுக்க முடியும். உ பாடுபவனது உணர்ச்சித் துடிப்புத்தான் கவிதையின் எல்லாப் பகுதியிலும் பளிச்சிடும். உண்மையான உணர்ச்சி யில் பீறிட்டுக் கிளம்புகிற கவிதைக்கும்; பாட்டரங்கில் ஒரு தலைப்பைக் கொடுத்துவிட்டார்களே என்று சிலர் படைக் கும் கவிதைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். எனவே உள்ளத்தில் உள்ள நல்ல உணர்ச்சி கவிதை வடிவில் வெளிப்படுத்தப்படும் போது அது நம்மைக் கவர்கின்ற கவிதையாகி விடுகிறது. 'உள்ள உணர்ச்சிகளை நல்ல தமிழ் வரிகளால் பாடியி ருக்கிறேன்' என்று கலைஞர் முன்னுரையில் கூறுவது பொருத்தமாகவே உள்ளது. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்.'