உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் கலைஞர் நல்ல தமிழில் நயம்படப் பாடுபவர். 'இரு வரிசை ஏற்று இருவர் இசைவு ஏற்றுத் தம் இரு வரிசை விட்டு ஒரு வரிசை யாவதற்கு ஒருப்பட்ட ஒளித்தங்கம்' 30 என்று பெண்ணைப் பற்றிப் பாடுகிறார். நல்ல தமிழில் நயம்பட அமையும் இக்கவிதை உள்ள உணர்ச்சிகளை ஒழுங் காக வெளிப்படுத்துகிறது. இன்று புதுக்கவிதை பற்றி வரை யறை செய்கின்ற திறனியர் (Critics) வடிவத்தை முன்னிறுத்து வது மரபுக்கவிதை; கருத்தை முன்னிறுத்துவது புதுக் கவிதை என்கின்றனர். மரபு அறிந்து மரபு மீறிய கவிஞர்கள் புதுக்கவிதையிலும் வெற்றி கண்டார்கள். ஆனால் யாப்பு வேலியை அகற்றி விட்டார்கள் என்று தெரிந்தவுடன் கண்ட வர்கள் எல்லாம் கிறுக்கத் தொடங்கி அதற்குப் புதுக்கவிதை என்று பெயரும் இடத் தொடங்கி விட்டார்கள். 'யாப்பு வேலி அகற்றப்பட்டதால் கண்டவர்கள் எல்லாம் மேய வந்துவிட்டார்கள்' என்று அப்துல் ரகுமானும் உறுதிப் படுத்துகிறார். அதே நேரத்தில் கலைஞர் மரபுவாயிலான சந்தங்களை அப்படியே கையாள முடியவில்லை என்பதையும் சீர்தளை பார்த்தால்தான் கவிஞராக முடியாது என்பதையும் அடக்கத் தோடு குறிப்பிடுவார். சீர், தளை, அணி என்றெல்லாம் யாப்பில், தமிழில் சில இலக்கணச் சொற்கள் இருப்பதே தெரியாமல் புதுக்கவிதை எழுத வந்த புற்றீசல்கள் பல உள்ளன. இந்நிலையில் மரபு அறிந்து, புதுமை படைக்கும் கலைஞர் சிறந்த கவிஞரே என்பதை கவிதையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அதே நேரத்தில் கலைஞரிடத்தில் என்ன அழகான அவையடக்கம்!