________________
31 கலைஞர் மேல் காதல் கொண்டேன் 'ஈரணியாய் நிற்கின்ற கவிஞரிடைச் சீரணிகள் தெரியாத நான் தலைவன்' என்கிறார். விடுதலை வீரர்களைப் பற்றிப் பாடும்போது அவர் தன்னை அடையாளம் காட்டுகிறார். 'தலையறுத்த வீரர் கதை பாடுவதால் தளை யகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர் தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால் தொடை தட்டும் என் பாட்டும்! என் கவிதை யாப்பின்றிப் போனாலும் போகட்டும்- நம்நாடு, மொழி மானம் உணர்வெல்லாம் காப்பின்றிப் போதல்கூடாதெனும் கொள்கை யொன்றால் வாய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல் -நெஞ்சில் ஊறுகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக் கொள்கை மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று; சொல்வேன். நாடு, மொழி, இனம் காக்கப்படவேண்டும் எனும் உணர் வில் தெளிவாக இருக்கும் கலைஞர் அதனைத் தெளிவு படுத்துகிறார் அடக்கத்தோடு. எனவே ஒரு கொள்கை உடைய கவிஞர், அந்தக் கொள்கைகளை மறவாமல் பாடும், மறவாமல் போற்றும் கவிஞர், வெறும் பேச்சோடு எழுத்தோடு நின்றுவிடாமல் முன்னணியில் நின்று செயல்படுங் கவிஞர், வாய்ப்பு நேரும் போதெல்லாம் தன் கொள்கையையும் கவிதைக்குள் செருகி விடுவார். 'ஒருமைப் பாடு காண இந்தியாவும் - நம் உரிமைப்பாடு காணத் தமிழகமும் உயர்தனிக் கொள்கையென கொண்டுவிட்டோம்' என்கி றார். அதே நேரத்தில் கருத்தினை எடுத்துவைப்பதில் கலை ஞர் எந்த இடத்திலும் இடர்ப்பட்டதில்லை. கவிதையில் எந்த இடத்திலும் தடுமாற்றம் நேர்ந்ததில்லை.