உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 32 'பறக்காமல் இருக்கின்ற பறவை நான் - இலக்கணச் சிறகு முளைக்காமல் தவிக்கின்ற கவிக்குஞ்சு நான் பறக்காமல் இருக்கின்ற பறவை நான் - கூடுவிட்டுக் கூடு பறக்காமல் இருக்கின்ற பறவை நான்' தன் நலம் தன் வாய்ப்பு என்று கருதிப்பார்த்து அந்த அளவுகோலுடனேயே அலைந்து கொண்டிருக்கும் சிலர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து விடுகின்றனர். கடந்த பிறந்தநாள் விழாவின்போது நடைபெற்ற கருத்தரங்க மேடையில் இருந்த இரண்டு பேரைக் காணவில்லை. வேறு கூடு தேடிப் போய் விட்டார்கள். கலைஞர் தன் கவிதையில் தன் தன்மை யையும், நிலை மனம் இல்லாத நீசர்களின் தன்மையையும் பிட்டு வைத்து விடுகிறார். ஆனால் அதே நேரத்தில் தமிழகக் கவிஞர்கள் ஓர் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு கவியரங்கம் என்றால் நூறு, இருநூறு பேர் வந்து கேட்பார் கள். அல்லது பின்னால் வரப்போகும் நிகழ்ச்சிக்காகவும் சேர்த்து ஒரு ஆயிரம் பேர் கேட்பார்கள். ஆனால் கவியரங்கத் திற்குப் பல்லாயிரம் பேர் வந்து கேட்கும் அளவு அதற்குச் செல்வாக்கை உண்டாக்கியவர் கலைஞராகிய கவிஞர்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் தலைமையில் பாடியதாலேயே பல இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலை யில் கவிஞராக நிமிர்ந்து நின்று, தத்தம் செல்வாக்கினையும் பல கவிஞர்கள் வளர்த்துக் கொண்டனர். தமிழகக் கவிஞர் ஒருவர், கவிஞர் ஏறு ஒருவர் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக் குப் போயிருந்த போது கேட்பதற்கு இரண்டே பேர்தான் வந்திருந்தனர் என்பது செய்தி. எனவே கவிதைக்குக் கலைஞ ரால் பெருமை கிடைத்தது. கவிஞர்களுக்கும் புகழ் கிடைத்தது என்பது உண்மை. உற்பத்திப் பெருக்கம் பற்றி அவர் பாடிய கவிதைதான் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அரசு தந்த விளம்பரமாக அமைந்தது. அந்தப் புகழ்பெற்ற வரிகள் கருத்தாழமிக்க கலைஞரது கவிதைக்குச் சான்றுகள். முத்தென்றும் மணி