உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33333 கலைஞர் மேல் காதல் கொண்டேன் யென்றும் கணக்கின்றிப் பெறுதல் விட்டு நெல்லென்றும் வரகென்றும் உணவு பெருக்கிட அவர்கவிதை அழைக்கிறது. கலைஞர் கையாளும் உவமைகள் சிலவற்றைக் காண்பது அவரது கவிதைச் சிறப்பை உணர்த்தும். விடுதலை மறவர்கள் 'உறைமீறி வெளிவந்த கத்திபோல உயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார்' என்கிறார். 'வானத்து மீன் பெண்கள்; கூட்டுப்பேச்சே இடிக்குமுறல்; அவர் வாளொத்த கண்வீச்சே மின்னல் கீற்று; வட்டமுகில் காதலன்மேல் தெரிக்கின்ற பன்னீரே மழைத் துளியாம்' என்று இளைஞர்களுக்கு பிடிக்கும் இனிய உவமையை அடுக்குகிறார். வழக்கமாக 'ஏடெடுத்தேன் எழுதி முடித்தேன் என்றே என் வழக்கம் இதுவரையில்' என்று கூறுபவர் ஒருமுறை கவியரங்கிற்கு வருமுன்னர் சென்னை நகரக் குடிசைகள் தீயில் எரிந்து நாசமான நிகழ்ச்சியின் கசப்பினை மனத்தில் போட்டுக் கலங்குவதால் உடனே கவிதை எழுத முடிய வில்லை. அதை எப்படிக் கூறுகிறார் பாருங்கள். ஓடெடுத்த பரதேசி - பல வீடடுத்தும் பயனின்றி நிற்பது போல் நிற்கின்றேன்... என்கிறார். 'வாழப்பிறந்தவன் தான்மட்டு மென்று, தாழப்பறந்து மீன்கொத்தும் பறவை போல் - வலியோர் சிலர் எளியோர் தமை வதையே செய்தல் வாடிக்கையாம்; என்பதும் உவமைதான். புகழை நாடி ஓடுபவர்களுக்குப் புரியும்படி ஓர் உவமை யைத் தருகிறார்.