உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் கடற்கரையில் தலைநீட்டும் நண்டுகளைக் கை நீட்டிப் பிடிக்க ஓட... உடனவைகள் போன இடம் தெரியாமல் பதுங்கி விடும்... புகழும் அதுதான்!... 34 எந்தக் கவிஞரும் கருத்துக்களைச் சொல்லாமல் வெறும் சொற்களை மட்டும் வீசிக் கொண்டிருந்தால் அவை காலப் போக்கில் ஒலிச் சருகுகளாய் உதிர்ந்துபோகும். கலைஞர் கருத்துக்காகவும், தமிழின்பம் கருதியும்தானே கவிதை படைக்கிறார். அவர் கவிதை கருத்துக் கருவூலம் என்பதுதானே உண்மை. 'ஐம்புலனை இயக்காமல் இருப்பதுபோல் நடிப்பதுவும் சூது ஐம்புலனை அவித்துவிட்டுக் கோயில் மாடாய்த் திரிவதும் தீது' மூளைபற்றிக் கூறும்போது, இல்லாதார் பலருண்டு - அவர்கள் இல்லாதார்... உலகில் இருந்தும் இல்லாதார் - சிலருக்கு எள்ளிருக்கும் அளவுக்கு அஃதிருக்கும்; அதிலும் நிறையக் கள்ளிருக்கும் அதனாலே கண்டபடி கிறுக்கும்' என்கிறார். காதலையும் வீரத்தையும் பற்றிப் பாடும்போது, வீரமில்லாக் காதலினால் விரக்தியுண்டு வாழ்வில் துணிவே இல்லை. காதலில்லா வீரத்தில் கடுமை யுண்டு வாழ்வில் கனிவே இல்லை. அவையோர்க்கு என் தீர்ப்பை அறிவிக்கின்றேன் காதலும் வீரமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை- இதற்குக் குடும்பக் கட்டுப்பாடில்லை; என்கிறார். பெற்றிடுவீர் தாராளமாக!