உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 36 சில நேரம் நாம் வழக்கமாகக் கையாண்டு வரும் சில தொடர்களுக்கும், பழமொழிகளுக்கும் புது விளக்கம் கிடைக்கும். கேள்வியின்பமானது ஏற்கனவே உள்ள கவிஞர் படைப்புகளை நயம்பட எடுத்துரைத்துப் புதுவிளக்கமும் காட்டும்போது தானே ஏற்படும்? மக்களும் அதற்காகத் தானே அரங்குகளை நாடி வருகின்றனர். கிணறுவெட்டப் பூதம் புறப்படும்' என்பதற்குக் கலை ஞர் தரும் விளக்கம் புதுமையாக உள்ளது. "கிணறுவெட்ட 'மண்' குவியும் - ஒருபூதம் (LO GİT) பூமிக்குள் அடைந்திருந்த காற்று வெளிக் கிளம்பும் - மறுபூதம் (காற்று) பொங்கிவரும் புதுநீரே அடுத்த பூதம்... (நீர்) பொலிவுமிகு வான் தெரியும் நீர்மீது நாலாம் பூதம்! (விண்) புவியாளும் ஆதவனின் தீக்கதிரால் அந்நீரும் தூய்மையாகும்... ஐந்தாம் பூதம் (தீ) ஒரு கவியரங்குக்குத் தலைமை தாங்கும்போது பாடு வோரையும், அவரவர் தம் தலைப்புக்களையும் அலசி ஆராயவேண்டும். அந்த வேளைகளில் கலைஞரது இலக் கியப் பயிற்சி வெளிப்படுவதைக் காணலாம். காதலும் வீரமும் கலந்து பாடும்போது, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்' எனும் கவி வரியையும் அழகாக எடுத்துக் காட்டி விடுவார் கலைஞர். கலைஞரது கவிதை களில் எந்தப் பக்கம் புரட்டினாலும் கேலி, கிண்டல், நயம் இருப்பதைக் காணலாம். அதிலும் வீட்டுக்குள் இருந்து