உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 கலைஞர் மேல் காதல் கொண்டேன் எழுதி இதழில் வெளிவந்த, பின் எவரெவரோ படித்துப் பார்த்துச் சுவைக்கும் அளவில் அவர் கவிதைகளைப் படைப் பதில்லை. அவர் கவிதை மக்கள் அரங்கில் படிக்கப்பட்டு அவர்கள் கேட்டு இன்புறவும் ஆரவாரிக்கவும் வாய்ப்பாக நயத்துடன் அமைந்தாக வேண்டிய கட்டாயக் கட்டுப்பாடு கள் உள்ளவை. அவர் கவிதை அரங்கேறிய கவிதை; பல்லா யிரம் மக்களைக் கொண்ட அரங்குகளில் ஏறிய கவிதை. அதில் நயம் இருந்தால்தானே நாடு மகிழும்; நாடு ஏற்கும்; இல்லாவிட்டால் படிக்கப்பட்ட இடத்திலேயே எழுதிவந்த பைக்குள் திணிக்கப்பட்டாக மடிக்கப்பட்டுப் கவிதை வேண்டுமே? நயமான சில இடங்களைக் காண்போம். 'குற்றால அருவி நிகர் குழல் கொண்ட பொற்றாமரையின் பால் காதல்! அதற்காக விற்றானோ வீரம்; களத்தில்! இல்லையில்லை சிந்துபாடும் சிற்றாறாய் இருக்கின்றான் இதிகாசத்தில்' இது அபிமன்யு பற்றிய விளக்கம் என்றால் வியப்பாக ல்லையா? "தொண்டர் பிள்ளைக் கறி யளித்தார் -திருத் தொண்டர் பிள்ளைக் கவி யளித்தார் - இன்று கண்டர் பிள்ளைக் கறி வளித்தார் - பிள்ளைக்கு அறிவு அளித்தார் வேலூரில் கல்லூரி நிறுவிய கந்தசாமிக் கண்டர் பணியைப் பெருமைப் படுத்தும் நயமான டம் இது. கடலைப் பற்றிய அவர் விளக்கம் 'பரந்த மனம் என்பதற்கு ஊமையாகி சிலகாலம் ஊழியாகி உலகிற்குத் தீமையாகி பின் சினம் அடக்கும் துறவிபோல் ஆமையாகிச் சீறும் அலை சுருக்கிக் கொள்வாய்' என்கிறார்.