உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் "பருவமும் வேறிலை பனிமலர் - இருகனி மரம் இடையிலோ, எழில் நடையிலோ விழியாம் வேற் படை டையிலோ, இதழ்க் கடையிலோ முரணிலை முறுவலும் ஒரு நிலை" என்கிறார். "இகழ்வார்க் கிருப்பது தலையும் அல்ல; ஏசிக் கிறுக்குதல் கலையும் அல்ல புகழ்வார் பின்னே போதலும் தீது இகழ்வார் எதிர்த்தல் அதனிலும் தீது இது கருத்தாழமிக்க நயம். 'கலைத் திலகம் என்றாலோ பட்டமாகும்! கலை திலகம்! என்றாலோ; மங்கை பட்டமரமாவாள்! இதுவும் நயம்தான். 38 இத்தகு நயம் காட்டும் கலைஞர் கையறு நிலைப் பாடலில் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்றுவிட்டார். பறம்பைப் பிரியும் போது கபிலர் புலம்பியதைவிட, பாரியை நினைத்து ஒளவை அலறியதை விட, அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலாவில் இருந்த தந்தையை நினைத்து ஏங்கும் பாரி மகளிரைவிட, 'முல்லையும் பூத்தியோ ஒல்லை யூர் நாட்டே' எனும் புறப்பாடலை விட அண்ணா மறைவின் போது கலைஞர் பாடிய கவிதை காலம் கடந்து வாழும் சாகா இலக்கியமாகும். 'நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்' விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே; அந்த விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?' என்று விரியும் அவர் கவிதை சொல்லில் அடங்காத துயரைத் தொட்டுக்காட்ட முயல்கிறது, அவராலும் அடக்க முடியாத