________________
கழகப் பொதுச் செயலாளர் னமானப் பேராசிரியர் அவர்கள் அணிந்துரை தமிழும் தமிழினமும் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து தரணி போற்ற வாழவேண்டும்; அதற்கான வழிகாண வேண் டும் என்பதில் தளராத ஆர்வத்துடன், தமது பேச்சாலும், எழுத்தாலும் பணியாற்றி வருபவர் எனது அன்புக்குரிய முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள். அவர் 'கலைஞர் மேல் காதல் கொண்டேன்' என்பது எனக்கு வியப்பே! தமிழுள்ளம் எவரை ஏற்கும்? எதற்காகப் பிறரைப் போற்றும்? என்றுதான் கேட்கத் தோன்றும். ஆயினும் கலைஞரை ஒரு தலைவராக, அரசியல் வழி காட்டியாக மட்டும் மனம் கொள்ளாமல், தமிழ் மூச்சாக உணர்வாக தமிழ்மரபாக -மானமாக ஏன், இனம்காக் கும் மறவனாதலின் இனவடிவமாகவே கருதும், மதிக்கும் தமிழ்க்குடிமகன், கலைஞர்மேல் கொண்ட காதல் என்பது தமிழ் மீதும் இனத்தின் மீதும் கொண்ட காதலே என்பேன். இந்த ஏட்டில் இடம் பெற்றுள்ள எழுத்துக்களில் கலைஞரின் கவிதையும் உண்டு; அவரது கவிதைத் திறன்