________________
39 அவலம் முற்றிலும் கலைஞர் மேல் காதல் கொண்டேன் உணர்த்திவிடாமலும், முற்றிலும் மறைத்து விடாமலும் நம்மை இங்குமங்கும் ஊசலாடவிடு வது தானே கவிதை! அதைக் கலைஞரின் கையறுநிலைப் பாடல் தெளிவாக்கிச் செல்கிறது. இதுகுறித்து மட்டும் தனியே ஆய்வு செய்யவேண்டும். இத்தகைய சிறப்புப் படைத்த கலைஞர் தமிழை வளர்த் தவர், தமிழால் வளர்ந்தவர்; தமிழைக் காத்தவர், தமிழால் காக்கப்படுபவர். 'உடல் இளைத்துப் போனாலும் உயிர்மட்டும் இளைக்கவில்லை-நெஞ்சில் சுடர் வழங்கத் தமிழிருக்கச் சோர்வுதான் மேவிடுமோ?' என்று உ உருகுபவர். "சின்னச் சேவல் சண்டை காசுக்கு மன்னர் போடும் சண்டை - நாட்டுக்கு நீங்கள் போடும் சண்டை - பாட்டுக்கு நாங்கள் காணும் சண்டை - தமிழுக்கு' என, கவிதை பாடுவதே தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக என்று கருதுபவர். அந்தத் தமிழ் கலைஞரை என்றும் கவிஞ ராக, தமிழினத்தில் தன்னேரிலாத மகனாக வாழ வைக்கும். ஆனால் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. கலைஞரின் தமிழ்ப்பற்றே கலைஞருக்குப் பலவீனம்; ஆம்! கர்ணன் சிறப்பெல்லாம் அவன் கொடையில்தான். கர்ணன், பிறர் எது கேட்டாலும் இந்தப் பிறவியில் மறுத்தறி யான்; உயிரே எனினும் ஈந்திடுவான். இது கர்ணனுக்குரிய கர்ணனுக்கேயுரிய பலம். இந்தப் பலமே அவனது பலவீன மாகிவிட்டது. கண்ணன் கர்ணனின் கொடைப்பலத்தைத் தானே பலவீனமாகப் பயன்படுத்திக் கொண்டு கர்ணனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தினான். இதுபோல் கலைஞரின் தமிழ்ப்பற்றைப் புகழ்ந்தும் அவரது தமிழ்ப்பசிக்குத் தீனிபோட்டும், அவர் செவியகம்