________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 40 நிறையக் கவிதைகள் புனைந்தும் கலைஞரிடமிருந்து பதவி களை, பட்டங்களை, பரிசுகளைப் பெற்றோர் பலர். கலைஞ ரின் அந்தப் பலத்தை பலவீனமாகப் பயன்படுத்திக் கொண்ட போலிகள் பலர் 'அற்ற குளத்து அறுநீர்ப்பறவை 'களாக மாறி எதிர்க் குளத்தின் கரையில் அமர்ந்துகொண்டு இழிமொழி களை வீசிக்கொண்டிருப்பது எதனைக் காட்டுகின்றது? கலைஞரின் பலமே அவரது பலவீனம் என்பதைத் தானே! அதனால் தானே, 'செய்திப் படங்களில்கூடக் கலைஞர் உருவம் கண்டு மரியாதை செய்கிறவன் நான்; அவர் குரலெடுத்துப் பிறிதொ ருவர் பேசுகிற போதுகூட மௌனமாக என் நினைவுகளை சிறையிடுகிறவன் நான்; காரணம், இந்த இனத்தின் இரட்சகர் என்பது கால தேவனின் கட்டளைப் பிரகடனம்' என்று எழுதும் ஒருவரால்கூட இப்போது நேர் எதிர்மாறாக எழுதவும், வசைமொழியில் இறங்கவும் முடிகிறது. ஆனா லும் என் போன்றவர்கள் ஆளுகின்ற காலத்தில் அருகில் வராதவர்கள்; என்றாலும் 'பலபத்து ஆண்டுகளாய் பாதையினை மாற்றாமல் நிற்கின்ற காரணத்தால் நேர்மை உணர்ந்தவர்கள் எனவே மணிவிழாக் காணும் மாண்புறு கலைஞர் தமிழகம் கண்ட தனிப்பெருந் தலைவர்; போலிகள் போகலாம்; போற்றலாம்; தூற்றலாம்; வேலிகள் நாங்கள்; தொலைவிலே நிற்பினும் கலைஞர் பெருமையை ஞாலத்திற் குணர்த்துவோம்; அவர் புகழ் வாழ்த்தி அகமகிழ் வுறுவோம்; வாழ்க