உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

41 கலைஞர் மேல் காதல் கொண்டேன் சமத்துவத்துக்குச் சரியான வழி (தலைவர் கலைஞர் அவர்களின் மணிவிழாவுக்காக திரு.இளமுருகு பொற்செல்வி அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க எழுதப்பட்டது) கலைஞர் சட்டமன்றத்தில் பணியாற்றிய போது எதிர்க் கட்சி வரிசையில் இருந்து கூர்மையான வினாக்களைத் தொடுத்ததுண்டு. ஆளுங்கட்சி வரிசையில் இருந்தபோது அறிவுத்தெளிவோடும், கூர்மையோடும், கிண்டலாகவும் விடை சொன்னதுண்டு. சில நேரம் எதிர்க்கட்சியினர் சூடாக வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. கலைஞரின் கூர்மையான தருக்கம் முன்னவர் தம் பேச்சுகளைக் கொண்டே தன் கருத்தை அழகுற வெளிப்படுத்தும் திறம் ஆகியவற்றுக்கு எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்ச்சியை விரித்துரைப்போம். பாரதியார் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதுரையில் உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இப்போது ரீகல் திரையரங்கமாகவும் செயற் பட்டு வரும் இந்த மன்றத்தில் மனமகிழ் மன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் பாதிப்பேர் பிராமண அன்பர்கள். ஒரு காலத்தில் பிராமணரல்லாதார் யாரும் இதில் உறுப்பினரே