________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 42 ஆக முடியாதநிலை. மெல்ல மெல்ல நம் அன்பர்கள் நுழைந்து இடம்பிடிக்க வேண்டியிருந்தது. தமிழ் வளர்த்த மதுரையில் நடுவில் உள்ள ஒரு மன்றத்தில் கூடத் தமிழர்கள் 'நுழைய வேண்டிய நிலை இருப்பதை வெட்கத்துடன் எண்ணிப்பார்க்கவும். விழாக்குழுவினர் திரு. நெடுமாறன், அமைச்சர் காளி முத்து ஆகியோரை வெவ்வேறு நாட்களில் அழைத்திருந்த னர். டாக்டர் கலைஞர் பாட்டரங்கிற்குத் தலைமை தாங்குவ தாக இருந்தது. கவிஞர்கள் உரிய கவிதைகளுடன் வந்துவிட் டனர். கலைஞரின் இருபத்தைந்து ஆண்டு காலச் சட்டமன் றப் பணியைப் பாராட்டும் விழாவும் அன்று மதுரையில் இருந்தது.மேலும் கலைஞர் தில்லி சென்று விட்டு அன்று தான் மதுரை வந்திருந்தார். கவிதைத் தலைப்புகள், பாடும் கவிஞர்கள் பற்றிய செய்திகள் தக்க நேரத்தில் அவர்கட்கு அறிவிக்கப்படாததாலும் பரபரப்பு மிக்க பயணங்களாலும் அவரால் தலைமைக் கவிதையை உருவாக்க முடியவில்லை. தக்க ஏற்பாட்டுடன் 'கவியரங்குக்குத் தக்க பாட்டுடன் நான் வரவில்லை' என்று அவரே குறிப்பிட்டார். எனவே அவர் பாரதி பற்றி உரை நிகழ்த்துவதாக ஏற்பாடாகியது. காலை 11 மணிக்கு இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டவுடன் பாட்டரங்குக்கு நான் தலைமை ஏற்றேன். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கிடையில் ஒருவரது பேச்சில் பாரதியாரின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்று எடுத்துக் காட்டப்பட்டது. பாரதியார் சாதி சமய வேறுபாடு பார்க்காதவர். 'படரும் சாதிப் படைக்கு மருந்து மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்' என்று பாவேந்தரே பாராட்டுகிறார்.