________________
1333 43 கலைஞர் மேல் காதல் கொண்டேன் தம் வாழ்நாளில் அவர் தொடர்பு கொண்ட ஆட்களிடம் அவர் வேறுபாடில்லாத போக்கையே மேற்கொண்டார். ப.கனகலிங்கம் எனும் அரிசனச் சிறுவனுக்குப் பூணூல் மாட்டிவிட்டு, அதற்குரிய முறைப்படி மந்திரங்கள் ஓதி அவனைப் பிராமணருக்குச் சமானமாக்கிய பெருமை பாரதி யாரைச் சாரும். ஏழை அரிசனச் சிறுவனைக்கூட மேல் சாதிக்காரனாக மாற்றிவிட வேண்டும் என்று முனைந்த பாரதியாரின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். ஆனால் பாரதியார் நூற்றாண்டு விழாவில் முன்னின்றும், பின்னின் றும் செயற்பட்ட பிராமண அன்பர்கள் பாரதியாரின் இத்த கைய சமத்துவ முயற்சி குறித்து என்றைக்காவது சிந்தித்த துண்டா? ஒருவேளை மறந்துவிட்டாலும் நினைவூட்டப்ப டும் போது ஏற்றுச் செயலாற்ற வேண்டும் எனும் எண்ணமா வது கொண்டதுண்டா? ஒவ்வோர் அரிசனச் சிறுவனும் பூணூல் போட்டுக் கொண்டால் எல்லாரும் சமமாகி விடுவோம் எனும் கருத்து நடைமுறைக்கு ஒத்துவருமா? பூணூல் போட்டு விடுவதா லேயே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒருவனைப் பிரா மண வரிசையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்று பிராமண அன்பர்கள் ஒப்புக் கொண்டார்களா? பூணூல் போட்டுக் கொண்டு பிற்படுத்தப்பட்ட ஒருவர் 'பிராமணன்' ஆனதும் மற்ற பிராமணர்கள் எல்லாம் கொள் வினை - கொடுப்பினைகளில் (மண உறவுகளில்) வேறுபாடு பார்க்காமல் நடந்து கொள்வார்களா? ப.கனகலிங்கம் வீட்டி லேயே உறவு கொள்ளவும், அவர் வீட்டில் மண உறவு கொள்ளவும் பிராமண சமூகம் முன்வந்ததுண்டா? சூத்திரன் பூணூல் போட்டுக் கொண்டால் என்ன ஆகும்? 'கம்மியர்' தொழில் செய்யும் கம்மாளர்கள் பூணூல் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள். ஆச்சாரிகள் என்று பெயரை வைத்துக் கொண் டனர். பிராமணர்கள் இவர்களை எல்லாம் அரயணைத்துக்