உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 44 கொண்டார்களா? ஒருசமயம் சாத்தூர், சிவகாசிப் பகுதியில் உள்ள நாடார் சமூகத்தினர் கூட்டாகப் பூணூல் போட்டுக் கொண்டார்கள். அப்படிப் போட்டும் அவர்கள் பிராமணர் கள் ஆகிவிடவில்லை. பிராமணர்கள்தாம் ஏற்கனவே நான்கு பிரிவுகள் உருவாக்கி வைத்துள்ளார்களே! அந்த வகையில் நாடார் சமூகத்தினர் பூணூல் போட்டுக் கொண்டதும் 'க்ஷத்தி ரியர்' என்றுதான் பெயர் வைத்துக்கொள்ள முடிந்ததேதவிர, பிராமணர் எனும் முதல் வகுப்பில் போய் உட்கார முடிய வில்லை. அதுசரி, மன்னர் மரபினர்க்குரிய 'க்ஷத்திரியர்' எனும் பெயர் வாணிக மரபினராகிய நாடார் சமூகத்தினருக்கு எப்படிப் பொருந்தும்? தமிழ் வழங்கும் 'வாணிகர்' எனும் பிரிவாக வாழ்வதைவிட, பிராமணர் வழங்கும் 'க்ஷத்திரியர்' ஆகிவிட்டால், அதற்காகப் பூணூலையும் மாட்டிவிட்டால் பிராமணருக்கு அடுத்தாவது வந்துவிட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்களா? விருதுநகர் போன்ற இடங்க ளில் 'க்ஷத்திரிய வித்தியா சாலை'களை உருவாக்கினர். அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியேகூட 'சைவபானு க்ஷத்திரிய கல்லூரி'தான். இவ்வளவு செய்த பின்னும் பிராமணர்கள் இவர்களைச் சமமாக நடத்துகிறார்களா? சிந்திக்க வேண்டும். இதை நம்பி ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் செட்டியார்க ளும் பூணூல் அணிந்து கொண்டனர். அவர்கள் வைசியராக முடிந்ததே தவிரப் பிராமணர்களாக முடியவில்லையே! பலர் பூணூல் போட்டும் எந்தப் பிராமணரும் அவர்களு டன் மண உறவோ, நட்புறவோ கொள்ளவில்லையே! அப் படி நாடார் சமூகத்தினர், செட்டியார் சமூகத்தினர், கம்மாளர் சமூகத்தினர் யாரும் பிராமணர்கள் ஆகியிருந்தால் பாரதியார் செய்த முயற்சி பலனளித்துவிட்டது என்றே கூறலாம். அதையே மேற்கொண்டிருக்கலாம். அதுவும் திடீரென்று சமபந்திப் போசனம்' என்று போட்டுப் பலரும் கலந்