________________
45 கலைஞர் மேல் காதல் கொண்டேன் துண்ணும் நிகழ்ச்சியை நடத்திப் படமெடுத்துக் கொண்ட பிறகு அவரவரும் அவரவர் 'சாதி' வேலையைக் கவனிக்கப் போவதுபோல, பாரதி நூற்றாண்டு விழாவின்போது விழா வுக்கு வருகிறவர்கள் அனைவருக்கும் பூணூல் மாட்டி மந்தி ரம் ஓதி, ஆகம ஆணை பிறப்பித்தும் பிராமணர் ஆக்கியிருக்க லாமே! ஏன் அதைச் செய்யவில்லை? நாம் பூணூல் அணிந்து கொண்டாலும் புதுக்கோலம் புனைந்து கொண்டாலும் நமக்குள் நாமே உயர்ந்தவர்கள் - மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் எனும் போக்கைத்தான் உரு வாக்க முடியுமே தவிர எவரும் சமமாகிவிட முடியாது. பூணூல் அணிந்து கொண்டதால் ஒருவன் தன்னைச் க்ஷத்திரிய னாக, வைசியனாக உயர்த்திக் கொண்டு, பூணூல் அணியாத தன் உடன்பிறப்பைச் சூத்திரனாகவே விட்டுவிட்டுப் போக லாம். அவ்வளவுதான். எனவே, மேற்கூறிய கருத்துக்களிலிருந்து சில முடிவுக ளைக் காணலாம். கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய நிகழ்ச்சி பாரதியின் தூய உணர்ச்சியைக் காட்டுவதே தவிர நடைமுறைக்கு வரமுடியாதது. அப்படிப் பலர் முயன்றும், கூட்டாக முயன்றும் அவர்கள் சமத்துவத்தைக் காண முடிய வில்லை. அப்படியானால் சமத்துவம் எப்போதுதான் வரும்? கலைஞர் இந்தக் கருத்துக்களை மனத்திற் கொண்டும், சுட்டிக்காட்டியும் தன் கருத்தைத் தெரிவித்தார். 'நூற்றுக்கு தொன்னூற்றேழு பேராக இருக்கிறவர்களுக் குப் பூணூல் மாட்டி அவர்களை எல்லாம் பிராமணர்கள் அளவுக்கு உயர்த்திச் சமத்துவம் காணுவது என்பது நடக்க முடியாததொன்று; நடைமுறையில் அது வெற்றியடைய வில்லை. அதைவிடச் சுருக்கு வழியும், உடனடியாக நடக்கக் கூடியதும், பாரதியாரின் சீர்திருத்த உணர்வைப் போற்றக்