உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 46 கூடியதுமான ஒரு வழியுண்டு. அந்த வழி இதுதான். 97 பேரை மாற்றுவதைவிட மூன்று பேர் தங்களை மாற்றிக் கொண்டால் சமத்துவம் வந்துவிடும். மூன்று பேராக உள்ள பிராமணர்கள் தாங்கள் அணிந்துள்ள பூணூலைக் கலைந்து விட்டால் போதும். அனைவரும் சமமாகிவிடலாம்' என்று கலைஞர் குறிப்பிட்டார். இந்தக் கருத்தைக் கேட்டதும் கூட்டத்திற்கு வந்திருந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். கலைஞரின் இந்தத் தருக்கத்தில் உள்ள பொருத் தத்தை அறிந்து பாராட்டினர். ஆனால் கூட்டத்தில் சிலரது முகங்களில் ஈயாடவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கலைஞரின் இந்தக் கருத்து ஏற்கத்தக்கதா? நடை முறைக்கு ஏற்றதா? என்றால் 'ஆம்' என்றே விடை கூறவேண்டும். பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்ததாகக் கருதிக் கொள்ளும் பிராமணர்கள் உணவு முறையில் சைவக் கொள் கையை விட்டுவிட வேண்டியதில்லை. வழக்கமான பூசனை முறைகளைக்கூட விடவேண்டியதில்லை. மண உறவுகளைக் கூட எப்படியோ வைத்துக்கொள்ளட்டும். காலம் கனிந்து கனிந்து கலப்பு மணங்கள் பெருகப் பெருக அதற்கொரு முடிவு வரட்டும். ஆனால் புறத்தோற்றத்தில் மற்ற மக்களிடமிருந்து தங் களை வேறுபடுத்திக் காட்டும் பூணூலை விட்டுவிடுவதால் ஒருவகைச் சமத்துவத்தைக் கொண்டுவர முடியுமா? 'பாரதி எங்களவாள்' என்று பெருமைப்படும் பிராமணர்கள், பின் னால் இருந்துகொண்டு தமிழக அரசினை பலகோடிப் பணத் தைச் செலவிட வைத்தவர்கள் பாரதியாரின் போக்கிலேயே போய் மறுமலர்ச்சி காணவேண்டாமா?