உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

47 கலைஞர் மேல் காதல் கொண்டேன் கனகலிங்கங்களை மாற்ற முனைவதைவிட மூன்று பேர் முனைந்து பூணூலை அகற்றிவிட்டுப் பாரதிக்குப் புதுப்பொ ருள் காட்டலாமே! கலைஞரின் இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும். ஆனால் நாம் சிந்தித்து என்ன பயன்? பிராமண சமூகம் அல்லவா இதைச் சிந்திக்கவேண்டும். கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பிராமணர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள். அவர்கள் சிந்தித்திருப்பார்களே என்று கேட்கலாம். ஆம்! அவர்கள் சிந்தித்தார்கள். ஆழமாகவே சிந்தித்தார் கள். கூடிக் கூடிக் கலந்து கலந்து சிந்தித்தார்கள். அதன் விளைவு அடுத்த நாளே மறுமலர்ச்சி காணத்துடித்தனர். விழா முடிந்ததும் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத் தில் பிராமண உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கலைஞ ரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கலைஞர் அப்படிப் பேசியதற்காக, ஏற்பாடு செய்த செயலாளர் (தமிழர்) வருத் தம் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு குரலில் ஓங்கி முழங்கினர். தங்களைப் பெரிதும் புண்படுத்தி விட்டதாகப் புலம்பி நொந்தனர். இதுதான் பிராமணர்கள் சிந்தித்ததின் விளைவு! கருத்துக்களைக் கூறுவதில் அங்கதமும் இடம் நோக்கி ஏற்றவாறு கூறுவதில் கூர்மையும் படைத்த கலைஞர் பன்நூறாண்டுகள் வாழ்ந்து, முடமாகிப் போய்க் கிடக்கும் மூடத் தமிழர்களைக் கடைத் தேற்றட்டும்!