உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 48 'குறளோவியம்' - வெளியீடு (தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய குறளோவியக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு முழு நூலாக வெளியிடப்பட்டது சென்னைப் பாரதி பதிப்பகத்தாரால். அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 20 மணித்துளிகள் பேசி இருந்தாலும் என் பேச்சின் ஒரு பகுதியாகக் 'குறளோவியம்' இரண்டாம் பதிப்பில் இடம் பெற்ற சில வரிகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.) கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டம் நெடுங்காலம் நிலைத்து நிற்குமா? குறளோவியம் நிலைத்து நிற்குமா? என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் நான் குறளோவியத்தின் பக்கம் தான் பேசுவேன். ஏனென்றால் கட்டடங்கள் என்ற முறையில் அவை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் சற்றுத் தளர்வு பெறலாம். ஆனால் ஒரு இலக்கியம் என்ற முறையில் ஓர் இலக்கிய கர்த்தா பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கிக் கொடுத்த கருத்துக்களுக்கு இப்படி ஓர் ஓவி யத்தை இதுவரையில் எந்தத் தமிழறிஞனும் எழுதியதில்லை என்பதுதான் உண்மை. திருக்குறளுக்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குறிப்புகள், உரைகள் வரைந்திருந்தாலும் ஒவ்வொருவருடைய நெஞ்சத் திலும் பதியுமாறு முற்றிலும் புதிய உத்தியைக் கையாண்ட ஒரே தலைவன் கலைஞர் மட்டும் தான்.