உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வும், இடம் பார்த்து அமர்ந்து கொள்ளும் சொல்லும் அதன் கருத்து நயமும் போற்றப்படுவதும் உண்டு. தமிழ்க்குடிமகன் பாடிய புதுக்கவிதையும் உண்டு, ஆற்றிய உணர்ச்சிதரும் உரையும் உண்டு. கலைஞரிடத்தில் அவர் கொண்ட உறவு, தொடர்பு கலைஞரிடம் பெற்ற பாராட்டு முதலானவை சுவை பயப் பன். ந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்ட நோக்கம் பற்றிய அவரது விளக்கம் உணர்ச்சியூட்டும். கலைஞர் காட்டும் 'சமத்துவத்துக்குச் சரியான வழியும்', அவர் விவரிக்கும் 'அந்தமானைப் பாருங்கள்' நூல் வெளியீட்டு உரையும் சிறப்பளிப்பன. தமிழ்க்குடிமகன் என்னும் முனைவர் பெயரையும், தமிழ்க்குடிமகன் எனலாகும் தமிழ் மக்களையும் இணைத்துக் காட்டித் தமிழ் மக்களின் நிலையுணர்த்தும் கலைஞரின் சொல்லோவியம் இடம் பெறுகின்றது. தமிழ் இனத்தின் வாழ்வில் புகுந்து கொண்ட வேற்றினத் தின் தாக்குறவால் பிழைபட்ட தமிழரின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் கடமை ஏற்ற கலைஞர், அச்சிட்ட தமிழ் ஏட்டின் எழுத்திடையே புகுந்துகொள்ளும் பிழையையும் நுண்ணிய நோக்குடன் சுட்டிக்காட்டும் திறனையும் இந்த ஏட்டில் காணலாம். சட்டப் பேரவையின் தலைவராகத் தமிழ்க்குடிமகன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருக்குக் கலைஞர் தெரி வித்த வாழ்த்துரை வரவேற்புரை -அவருக்குச் சூட்டப் பட்ட மணிமுடி எனலாம். கலைஞரின் தனித்தன்மையை ஆற்றல் மலர்ச்சியை, அறிவின் வளப்பத்தை, கலை உணர்வின் புலப்பாட்டைக் குறிப்பிடுகையில்,