________________
49 கலைஞர் மேல் காதல் கொண்டேன் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவர்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. அது திருக்குறளின் குற்ற மல்ல; ஒவ்வொரு மாணவனுடைய உள்ளத்திலும் அதைப் பதிய வைக்கின்ற உத்தியை எந்தக் கல்வித் துறையும் கையாளாதது ஒரு குற்றம். ஆனால் இனிமேல் திருக்குறளை வெறும் குறள் பாட மாக வைப்பதைவிட இந்தக் குறளோவியத்திலிருந்து நான்கு காதைகளைப் பாடமாக வைத்தால் அது பதிவதைப் போல் வேறு எவனுக்கும் எதுவும் பதியாது என்பதை என்னால் ஒரு ஆசிரியன் என்ற முறையில் உறுதியாகச் சொல்ல முடியும். பாடக் குழுவிலே இருக்கின்ற அறிஞர்கள் அரசியல் வேறுபாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளபடியே அவர்கள் வள்ளுவர் கூறுகிற நடுநிலை உணர்வு படைத்தவர் களாக இருப்பார்களேயானால் உள்ளபடியே வள்ளுவர் கூறு கிற செய்நன்றி உணர்வு இருக்குமேயானால் அவர்கள் இதைப் பாடமாக வைக்கவேண்டும்.