________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 50 மனமுவந்து வரவேற்போம்! (10.4.86 அன்று மதுரை யாதவர் கல்லூரிக்கு 'விருந்து' எனும் தலைப்பில் இலக்கிய உரையாற்றத் தலைவர் கலை ஞர் அவர்கள் வந்தபோது அக்கல்லூரியின் முதல்வராக இருந்து ஆற்றிய வரவேற்புரை இது.) தென்னவளே! பாரிற் சிறந்தவளே! என்றுமே என்னவளே! நெஞ்சில் இனிக்கும் தமிழ் என்னும் பெண்ணவளே கூப்புகிறேன் கை. செய்வதெல்லாம் செய்; எங்களைச் சிக்கலுக்குள் ஆளாக்காமல் செய் - என்று உரிமை கொடுத்து, உணர்வுக்கு மதிப்பளித்து, இந்தக் கல்லூரியின் உயர்வுக்கு உழைக்க வாய்ப்பளித்த தலைவர், தாளாளர், மற்றும் ஆட்சிக்குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே! நகர முழுவதிலுமிருந்து வந்து நாற்றிசையிலும் நன்னெஞ்சு படைத்த பெருமக்களே! ஆசிரியப் பெருமக்களே! என் அலுவல் துணையாய் அல்லும் பகலும் நெருக்கி நிற்கின்ற உழைக்கும் அலுவலர்களே!