முனைவர் மு.தமிழ்க்குடிமகன் (உன்னை யார்விட்டுப் போனாலும்) உடன்போக்கில் எல்லாம் உன் உடன் இருக்கும் பாலை மண்! 52 வாய்ப்பளிக்கும் இந்தப் பாலை மண் கல்லூரி பாங்குடன் வளர ஓரிலட்சம் உருபாயை உவந்து கொடுத்தாயே! மறக்கவில்லை நான்! 60 விழுக்காடு வாங்கினால்தான் உதவித் தொகை கிடைக்கும் எனும் உச்சக் கட்டச் சட்டத்தை ஒரு நொடியில் தூக்கிவிட்டு 40 விழுக்காடு வாங்கும் மாணவர்கள் (பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட) அனைவரும் உதவித் தொகை பெறலாம் எனும் அறிவிப்பைச் செய்த உன்னை மாணவர் உலகம் மறக்கவே மறக்காது! அந்த அறிவிப்பை நீ இந்த மண்ணில்தான் செய்தாய் என்பதை வரலாறு மறக்காது! நானும் மறக்கவில்லை! வரலாற்றுப் பெட்டகமே! உன்னை வருங்காலம் மறக்காது பொலிவுமிக்க பூம்புகார் படைத்தாய்! கட்டப் பொம்மனைக்கோட்டையில் அமைத்தாய்! வள்ளுவர் சிறக்கக் கோட்டமும் அமைத்தாய்! உண்மை. வரலாறு உன்னை மறக்காது! மறக்காது! ஆனால் மறைக்கும்! அது தற்காலிகமாக மறைக்கும்! காரிருள் கதிரவனை மறைப்பதுபோல! இன்று நீ பங்குகொள்வது நிறைவு விழா! உனக்கு நிறைவு ஏற்பட்டிருக்கும் வேளையில் நிகழும் விழா! இது நிறைவான விழா!
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/53
Appearance