53 கலைஞர் மேல் காதல் கொண்டேன் தானைத் தலைவனே! என் காதல் தலைவனே! இந்த மண்ணில் இது முதல் வரவேற்பா? - இல்லை ஐந்தாம் முறையாக அழைத்து வந்த வரவேற்பு! நாற்பது ஏக்கர் நிலத்தை நன்கொடையாகக் கொடுத்த அறிஞர் அண்ணாவின் வழிநின்று அறுபத்தி ஒன்பதில் நீ அடிக்கல் நாட்டினாய்; அன்று நீ நாட்டியது கல்! இன்று நாங்கள் காட்டுவது சோலைசூழ்ந்த கட்டிடங்கள்! உன் கைராசிதான் அது - என்று புராணிகனாக நின்று புளுகமாட்டேன் வாரி வழங்கும் பாரி போல் நின்று உன் மனத்தை நாட்டினாய்; - தொடர்ந்து பணத்தை நீட்டினாய்; அவற்றை ஏற்று உன்முன் வளத்தைக் காட்டினோம். சில கட்டிடங்கள் சிலிர்த்தெழுந்து நிற்குங்கால் 1972-இல் அவற்றைத் திறந்து வைக்க நீ வந்தாய்; ஒரு கல்லூரி உருவாகிறது என்று பெருமிதம் கொண்டாய் 1974-இல் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு இந்த மண்ணில் நடந்தபோது நாடு மறக்காத ஓர் அறிவிப்பை நாமணக்கக் கூறிய நாள் அது! (40 விழுக்காட்டுக்கும் உதவித் தொகை) 1979-இல் நான் முதல்வரான முதல் கட்டத்தில் கல்லூரிப் பேரவையைத் தொடங்கி வைக்க வருகை தந்தாய்! தமிழ்க்குடிமகனையே தலைப்பாக்கிய விழா அது! இன்று 10.4.86 இலக்கிய விருந்து எங்கள் மனக் கோட்டம் தீர்க்கும் மருந்து எனவே இது முதல் வரவேற்பா?-இல்லை ஆனால் - இது முதல்தர வரவேற்பு
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/54
Appearance