முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உன் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட தம்பியின் வரவேற்பு கோலோச்சும் மன்னவனே! உனக்குக் குடிமகன் தரும் வரவேற்பு! ஆண்டவனே! எம்மை ஆண்டவனே! உன் பக்தனல்ல நான்; உன் பக்கத்தவன்; அவன் தரும் வரவேற்பு - இது; இது ஒரு முதல்வர் வரவேற்பு! ஆம்! முதல்வர் வரவேற்பு! து நான்காம் வேற்றுமைத் தொகையாக அமைந்திருந்தால் இந்த நாடு மகிழும் - எனினும் அது நாளை நிகழும் ஆனால் நீ இங்கு வருவது ஐந்தாம் முறை என்பதனால் இது ஐந்தாம் வேற்றுமைத் தொகையாக அமைந்துவிட்ட வரவேற்பு! உன் காலைத் தொட்டு வரவேற்கலாம்! 54 ஆனால், நீ களிப்பதற்கு மாறாகக் கனல் கக்கி விடுவாயே! பெரியாரும் அண்ணாவும் பேணி வளர்த்த தன்மானத்தை இப்படியா வீணாக்கி இழிவு படுத்திவிட்டாய் என்று நீ கண்டிப்பாய்! என்னைத் தண்டிப்பாய்! எனவே நான் அப்படிச் செய்யமாட்டேன்! பகுத்தறிவுச் சிந்தனையும் மார்க்சியச் சிந்தனையும் பாடமாக வைத்துள்ள கல்லூரி தமிழ்நாட்டிலேயே யாதவர் கல்லூரி ஒன்றுதான்! எனவே நான் காலில் விழமாட்டேன்! அதனால், உன் கைகளைப் பிடித்துக் கண்களில் வரவேற்கின்றேன்! அதுவும் எந்தக் கை? ஒற்றிக்கொண்டு
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/55
Appearance