உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கலைஞர் மேல் காதல் கொண்டேன் தேர்தல் காலத்தில் மட்டும் தெரியும் கையல்ல! அது, கனல் கக்கும் உரையாடலை அள்ளி வீசி நாட்டுமக்களைக் கிறுகிறுக்க வைத்த கை! நூறு உரை வந்தாலும் உனக்கு மேல் யாருரையும் நிற்காது என்று ஓவியமும், காவியமும் சேர்த்தளித்த குறளோவியக்கை! சங்கத் தமிழைத் தரணியெல்லாம் படித்தறிந்து பொங்கித் ததும்பும் பூரிப்பைத் தந்திடும் கை! அந்தக் கைகளைப் பற்றிக் கனிவுடன் வரவேற்கின்றேன்! மறக்கவில்லை நாங்கள்! நன்றி மறக்கவில்லை நாங்கள்! நீ நெடுநேரம் பேச வேண்டும் என்பதையும் மறக்கவில்லை நான்! நீ ஏழாண்டுகட்கு முன் வந்த போது என் வரவேற்புரையில் உள்ளது இது 'இந்த மண் உன் சொந்த மண் நீ வித்துகளை இடலாம்; நாங்கள் விளைவாக்கித் தருகிறோம்!' என்றேன் விளைவைச் சொன்னால் வியந்துபோவாய்! இங்கு தமிழ் இளங்கலை படித்து, தமிழ் முதுகலையும் படித்து எங்கள் மாணவன் பாலகிருட்டிணன் இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் வெற்றி பெற்றான். தமிழில் முதுகலை படித்தவன் - அதுவும் தமிழிலேயே தேர்வு எழுதி இ.ஆ.ப. ஆனவன்! இந்திய வரலாற்றில் இதுதான் முதல் என்பேன்! நீ நாட்டிய கல்லூரி காட்டிய திறம் என்பேன்! ட்ட வித்தின் இணையற்ற விளைவென்பேன்! நீ, முதல்வராக இருந்தபோது உன்னைப் பாடியோர் பலர். உன்முன் ஆடியோர் பலர்,