முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உதவி நாடியோர் பலர்' ஆனால் உண்மையில்லாத சிலர் அதில் ஒளிந்து கொண்டிருந்ததை உன் பெருந்தன்மை காரணமாக வேறு பிரித்துப் பார்க்கவில்லை நீ. அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோல் பழுமரம் தேடிச் செல்லும் பறவைகளைப் போல் பலர் தடம்மாறி - தடுமாறி - கிளைமாறி அமர்ந்திருக்கலாம். பலபத்து ஆண்டுகளாய்ப் பாதையினை மாற்றாமல் நிற்கின்றேன்; அதனால் நின்னருகில் நிற்கிறேன். நின்று வரவேற்கின்றேன். நீ திட்டமிட்டு உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தில் உன் பெயரே இல்லை! அரசியல் புகுந்து, உண்மை வரலாற்றை ஊருக்குமறைக்கிறது! உன் கண்முன்னாலேயே உன் பெயர் விடப்படுகிறது! நீ கட்டிய கோட்டத்தில் இந்த நிலை! ஆனால், நீ கல் நாட்டிய இந்த மண்ணில் என்றும் தன்னேரில்லாத தானைத் தலைவனே! 56 உன் பெயரிருக்கும். நான் எனக்குரிய எல்லையைத் தாண்டிவிட்டேனா! என்னை மன்னித்துவிடு! உன்பால் உள்ள அன்பால் இந்த உளறல் என்று ஒதுக்கிவிடு! இல்லை! ஒருவேளை உன் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டேனா? ஆம் எனில், ஏங்கித் தவிக்கும் எங்களுக்கு ஆறுதல்கொடு உன்னைத் தாங்கிப் பிடிக்கும் தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒரு மாறுதல் கொடு! இன்று தூங்கித் திளைக்கும் தமிழர்களுக்கு ஒரு சொடுக்குக் கொடு!
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/57
Appearance