இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 58 'குறளோவியம்’ இரண்டாம் பதிப்பு 'குறளோவியம்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பலருள் ஒருவனாக நான் உரையாற்றியிருந்தேன். 'குறளோவியம்' முதற்பதிப்பு விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளியானபோது சேலம் மாவட்டத் தி.மு.கழக மும்,பாரதி பதிப்பகமும் இணைந்து சேலத்தில் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நடத்தின. முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் அவர்கள் தலைமையில் நான் நூலை வெளியிட்டு உரையாற்றினேன். இதில் எனக்குப் பதவி உயர்வு. இந்த உயர்வு பின்னாளில் என்னைச் சட்டப் பேரவைத் தலைவராக்கப் போகிறது என்று கனவுகூடக் கண்டிருக்க மாட்டேன். அதில் தலைவர் கலைஞர் அவர்கள் என்னைக் குறித்துப் பேசிய சில வரிகள் என் எளிய தோற்றத் துக்குப் பாராட்டுத் தெரிவித்தன.