இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
"ஒரே செடியில் இத்தனை வண்ணப் பூக்களா? ஒரு மனிதனிடத்தில் இத்தனை வகையான ஆற்றல்களா? அந்த ஆற்றல்களிலும் இத்தனைத் தனித் தன்மைகளா? என்று வியந்து போகிறார் தமிழ்க்குடிமகன். அதனால் கூறுகிறார், தீயவை பெருத்து நிற்க திருடர்கள் கொழுத்து நிற்க, நோயினை உணரா வண்ணம் நோஞ்சானாய்த் தமிழன்சாக தாயவள் அடையும் துன்பம் தடுத்திட முடியா வண்ணம் போய்விடக் கூடா தென்றால் போற்றுவோம் கலைஞர் தன்மை! அப்படிப்பட்ட உணர்வு தழைக்கும் இந்த ஏட்டினை வழங் கிய முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்கட்கு எனது வாழ்த்துக்கள்! அன்பன், க.அன்பழகன்