உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

59 59 கலைஞர் மேல் காதல் கொண்டேன் 'அந்தமானைப் பாருங்கள்' அணிந்துரை 1985 சனவரியில் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள அந்தமான் தோழர்கள் அழைத்திருந்தனர். 12.1.85 அன்று சென்னை வந்துவிட்டேன். தமிழர்களைச் சந்திப்பதற்காக அந்தமான் செல்லவிருக்கும் நான் தமிழினத் தலைவரைச் சந்திப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். நான் போன நேரத்தில் தலைவர் கலைஞர் வீட்டில் இல்லை. சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத் தம். எனினும் இன்றைய நாடாளுமன்ற மேலவை உறுப்பி னர் டி.ஆர்.பாலு அந்த வருத்தத்தை ஒரு நொடியில் போக்கி னார். என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து பழக்கப்பட்ட அவர் என்னை அவருடைய மகிழுந்திலேயே தலைவர் கலைஞர் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார். தலைவரை அவரு டைய இல்லத்தில் சந்திப்பது இதுவே முதல் தடவை. 1984 தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட களைப்பு தலைவர் கலைஞருக்கு நாட்டுமக்கள் தந்த தீர்ப்புப் பற்றியும் பேசினோம். அவருடன் பேசியது எனக்கு ஆறுதலாக இருந் தது. என் சந்திப்பும் அவர்க்கு ஒரு சிறு மகிழ்ச்சியையாவது தந்திருக்கும். வழக்கமாக நான் சந்திக்கும் போதெல்லாம் அவர்க்கு ஒரு புதுநூலைத் தருவது உண்டு. அதன்படி அன்று, நான் எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாகக்