________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 60 கொண்டு வந்த 'பாவாணரும் தனித்தமிழும்' எனும் நூலைக் கொடுத்தேன். பின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றேன். பிறகு அந்தமான் சென்று ஒருவாரம் சுற்றுப்பயணம் செய்துவிட்டுக் கல்லூரிக்குத் திரும்பினேன். என் பயணத் தைப் பயன்படுத்தி 'அந்தமானைப் பாருங்கள்' எனும் பயண நூலை எழுதி முடித்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் அணிந்துரை வழங்கினால் பெருமிதமாக இருக்கும் என்று கருதினேன். அவர்களிடம் நூல் அளிக்கப்பட்டபோது அவர் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தார். அந்தமான் சிறைச்சாலையைப் பற்றிய (Cellular Jail) நூலுக்கு அணிந் துரை எழுதும் தலைவரும் இப்போது சிறைச்சாலையில்! என்ன வியப்பு! அந்தச் சூழ்நிலையில் தலைவர் கலைஞர் அவர்கள் எழு திய அணிந்துரைதான் இது: அந்தமானைப் பாருங்கள்! சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது கண்குளிரக் காட்சிகளைப் பார்த்துக்களிக்க மட்டுமே என்றில்லா மல் அந்தப் பயணத்தைப் பயன்மிக்க செயல்களுக்கும் சிந்தனைகளுக்கும்; மற்றவர்க்கு ஓர் உந்துதலை உரு வாக்கிடும் வண்ணம் ஆக்கிக்கொள்ளும் ஆர்வமும் ஆற்றலும் பெற்றிருத்தல் வேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலா இடங்களுக் குச் செல்கின்றனர். வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொள்கின்றனர். அவர்களில் விரல்விட்டு எண்ணிச் சுட்டிக்காட்டக் கூடிய சிலர் மட்டுமே தங்களது பயண அனுபவங்களை அலுப்புத் தட்டாத வகையில் நூல்க ளாக வடித்து வழங்கியுள்ளனர்.