உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

61 கலைஞர் மேல் காதல் கொண்டேன் அந்தச் சிலரில் ஒருவராகவும் சிறந்த தமிழ் அறிஞ ராகவும் மதுரை ஆயர் கல்லூரி (யாதவா கல்லூரி) முதல்வராகவும் விளங்குகின்ற முனைவர் தமிழ்க்குடி மகன் அவர்கள் இதோ இந்த அரிய நூலைத் தமிழர்க் குத் தந்துள்ளார். பாரதி பதிப்பகத்து நண்பர் சிதம்பரம் இந்த நூலை அழகுற வெளியிட்டுள்ளார். "அந்தமானைப் பாருங்கள்” என்று நூலுக்குத் தலைப்புத் தந்திருப்பினும் 'அந்த மானைப் படியுங்கள்" என்ற தலைப்பே இதற்குப் பொருத்த மான தலைப்பாகும். "தமிழ்க்குடிமகன்" என்ற தலைப்பிலேயே அவர் முதல்வராக இருக்கும் கல்லூரியில் ஒருமுறை உரை யாற்றி இருக்கிறேன். மாணவர் பேரவையினர் அழைத் திருந்தனர். எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்று மேடையில் தான் கேட்டேன். எந்தத் தலைப்பில் வேண்டுமாயினும் பேசுங்கள் என்றனர். "முதல்வர்" என்ற தலைப்பிலேயே பேசலாமா என ஒரு நொடிப் பொழுது எண்ணினேன்! “முதல்வர்" வரும்; போகும்! தமிழ்க்குடிமகன் தான் நிலையானவன். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி மூத்த குடிமகன். எனவே தமிழ்க்குடிமகன் என்ற தலைப்பி லேயே பேசினேன். அந்தமான் தீவுக்குச் சென்னையிலிருந்து கிளம் பிய விபரங்களை அழகுற அடுக்கி, அங்கு சென்றால் தங்குவதற்கு வசதியான விடுதிகள் வரையிலே அவற் றுக்கு இப்போதுள்ள கட்டண விபரங்கள் உட்பட அனைத்தையும் முதற் பகுதியிலே அவர் தொகுத்துக் கூறியிருப்பது வியந்து பாராட்டுதற்குரியது.