________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் "என்ன செய்துவிடுவாய்? அந்தமானுக்கு அனுப்பி விடுவாயோ?" என்று மிரட்டுவோரைப் பார்த்து, குக்கி ராமங்களில்கூட குப்பனும், சுப்பனும் கேள்வி கேட்ட காலம் ஒன்றிருந்தது. - - அத்தனைக் கொடுமை இழைக்கப்படும் இடமாக அந்தத் தீவு ஆங்கிலேயர் காலத்தில் விளங்கியது. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்கள் மீது வன்முறைக் குற்றங்களைச் சுமத்தி ஆண்டுக்கணக்கில் -ஏன்; ஆயுட்காலம் வரையிலேகூட அந்தமானில் உள்ள சிறையிலே போட்டு வாட்டினர். எண்ணில் டங்கா எண்ணிப் பார்க்கவும் இயலா அக்கொடுமை களை எல்லாம் தமிழ்க்குடிமகன் அவர்கள் ஆதாரங்க ளுடன் அடுக்கிக் காட்டும்பொழுது படிப்போர் கண் கள் கலங்கிடும். நான் கலங்கினேன். அந்தத் தியாகிகள் வளர்த்த நெருப்பில் இன்றைக்குக் குளிர்காய்பவர்க ளையும் குத்திக்காட்ட நூலாசிரியர் தவறவில்லை. வங்காளியர் அறுபதாயிரம் பேர் தமிழர்கள் ஐம்பதா யிரம் பேர் இந்தி பேசுவோர் இருபதாயிரம் பேர் எஞ்சியுள்ளோர் மற்ற மொழிகள் பேசுவோர் - என்று கணக்கிட்டு புள்ளி விபரம் கூறப்படும் இந்த நூலில் அந்தமானில் தமிழுக்குப் புறக்கணிப்பு; தமிழருக்குப் புறக்கணிப்பு என்று சுட்டிக் காட்டும்பொழுது "அந்தோ தமிழினமே!" என்று இதயம் துடிக்கத்தான் செய்கிறது. 66 தென்னைமரம் ஏறித் தேங்காய் பறித்து அதனை உடைத்து உண்ணும் மிகப்பெரிய நண்டுகள் குறித்த செய்திகள் மிகக் குறைந்த அளவினராக ஆனால் இன்னமும் காட்டுமிராண்டிகளாக வாழும் இனத்தவ ரைப் பற்றிய குறிப்புகள் - சோழ மன்னன் அந்தத் தீவையும் வென்றான் என்ற வரலாற்று உண்மைகள் 62