உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

333 63 கலைஞர் மேல் காதல் கொண்டேன் இன்று அங்குள்ள நிர்வாக அமைப்பு தொழில் வளம் இயற்கை எழில் வளம் அனைத்தையும் ஒன்று விடாமல் ஆசிரியர் இந்தப் பயண நூலில் குறிப்பிட்டிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. தமிழ்ப்பற்று - இன உணர்வு - தன்மான உணர்வு நாட்டுப் பற்று மக்களின் நல்வாழ்வு - இவற்றின் நிலைக்களனாக உள்ளம் வாய்க்கப்பெற்ற ஒருவர்; தான் மேற்கொண்ட பயணம் குறித்து இப்படித்தான் எழுத முடியும். படிப்போர்க்கு நூலைப் படித்து முடிக் கும் வரையில் கீழே வைப்பதற்கு மனமின்றி ஆர்வம் எழுகின்ற அளவுக்கு எழுதப்படுவதே நூல்! அந்த வரிசையில் இடம் பெறுவது இந்த நூல்! மாணவர்களுக்கு மெத்தவும் பயன் வழங்கக் கூடியதும் பொதுவாக தமிழ் நாட்டு மக்களுக்கு அந்த மானைப் பற்றிய படம் பிடித்துக் காட்டக் கூடியதும் இந்த நூல் எனில் அது மிகையன்று! அந்தமான் நூற்றுக்கணக்கான விடுதலை இயக்க வீரர்களின் உயிரைக் குடித்தது மட்டுமல்ல; தன்மான இயக்கத் தளபதி என்னுயிர் நண்பர் ஆசைத்தம்பியின் உயிரையும் குடித்த இடம் என்கிறபோது அத்தீவின் மீது எனக்குள்ள கோபம் இன்னும் அடங்கவில்லை. 5.12.1986 அன்புள்ள, மு.கருணாநிதி இந்த நூலில் தன்மானச் சுடர் ஆசைத்தம்பி அவர்களின் மறைவு மற்றும் சிலை அமைப்புக் குறித்து எழுதாது விட்டு விட்டேன். இரண்டாவது பதிப்பில் அதனையும் சேர்த்து சரிசெய்து விட்டேன்.