________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 64 ஏன் இந்த எதிர்ப்பு? (14.1.87-இல் பொங்கல் விழாவுக்காக எழுதியது) தமிழினத் தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரி யர் அன்பழகனும் மற்றும் 20,000- க்கு மேற்பட்டோரும் மொழிக்காப்புப் போரில் இறங்கி இன்று தமிழகச் சிறைக ளில் வாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் பொங்கல் விழா வருகிறது. தமிழர்கள் கொண்டாடும், கொண்டாட வேண் டிய ஒரே விழா பொங்கல்தான். அதிலும் சாதி, சமய வேறுபாடு கடந்து கொண்டாடப்படும் விழா பொங்கல். இந்த ஆண்டுப் பொங்கலை எப்படிக் கொண்டாடுவது? ஒரு பக்கம் ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள் அண்டை நாட்டில் கொலைக்கும், சித்திரவதைக்கும் ஆளாகிக் கொண் டிருக்கிறார்கள். மற்றொரு புறம் இந்தி எதிர்ப்பு மறவர்கள் விழியினும் மேலான மொழிக்கு வரும் தீங்கு தடுக்கச் சிறை புகுந்திருக்கிறார்கள். மொழிக்கும், இனத்துக்கும் நேர்ந் துள்ள தீங்கு கருதி மனம் பொங்கியெழுகிறது, சினம் கொப்பளிக்கிறது. 'எப்பக்கம் வந்து விடும் - இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்? என்று கேட்ட பாரதிதாசனின் சீற்ற மொழிதான் இப்போதும் நினைவில் ஓடிக் கொண்டிருக்கிறது.