உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65 கலை லஞர் மேல் காதல் கொண்டேன் இந்தி எதிர்ப்புப் போர் என்பது ஏதோ அரசியல் இலா பம் கருதித்தான் நடைபெறுகிறது என்று சிலர் வழக்கம் போல் 'சாயம்' பூசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய போராட்டத்தை நடத்துவது ஒரு கட்சி என்றாலும் தமிழகத் தின் வாழ்விலும், தாழ்விலும் இடையறாது இணைந்து செல்லும் ஓர் இயக்கத்தின் தொடர்போராட்டம் இது என் பதை வரலாறறிந்தோர் உணர முடியும். முன்பின் வரலாறு எதுவும் அறியாமல் தன்னல வேட்டைக்காக அரசியலில் இறங்கியிருப்போர் வேண்டுமானால் எது வேண்டுமானா லும் சொல்லிக் கொண்டிருக்கலாம். 1937-ஆம் ஆண்டில் - இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலேயே சென்னை மண்டலத்தில் இராசாசியால் இந்தி புகுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்கும் வேலை யைத் தலைக்கு மேல் கொண்டிருந்த தமிழர்கட்கு 'இந்தி'ய ரையும் எதிர்க்கும் வேலை வலுக்கட்டாயமாக சேர்ந்தது. வந்து தமிழகத்தில் பிராமணரல்லாதாரின் நலங்காக்க நிறுவப் பட்ட நீதிக்கட்சி சமூக சீர்திருத்தப் பணியையும் செய்து வந்தது. எனினும் நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்துச் செயற்ப டும் அளவுக்கு வாய்ப்பும் பெற்றது. 1937-ல் நீதிக்கட்சி தோல்வியடைந்து காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தவுட னேயே இந்தித் திணிப்பு வேலையும் தொடங்கி விட்டது. இராசாசி தன் காலத்தில் 200 பள்ளிகளில் இந்தியைப் புகுத்த ஏற்பாடு செய்தார். இந்தித் திணிப்பு தமிழ் மக்களால் எதிர்க்கப்பட்டது. தேர்தலைப் பற்றியே கவலைப்படாத பெரியார் இதனை எதிர்த்தார் என்பது மட்டுமன்றி அரசியல் தொடர்பேயில்லாத தமிழ்க்கடல் மறைமலையடிகளும், அன்றைய தமிழ்ப் பேராசிரியர்களான நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரும் வெளிப்படையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில்