________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 66 இறங்கினர். ஈழத்துச் சிவானந்த அடிகள், சண்முகானந்த அடிகள் ஆகிய துறவிகளும் இப்போராட்டத்தில் இறங்கினர். இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளா? மொழியு ணர்ச்சி ஒன்று மட்டுமே கருதி இவர்கள் இப்போரில் இறங்கினர் என்றால் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டம் அரசியல் இலாபம் கருதியது என்பது முட்டாள்தனமான விரோதமல்லவா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த எதிர்ப்பு ஓரளவு இந்தித் திணிப்பைத் தகர்த்தது என்றாலும் முற்றிலும் தடுத்து விடவில்லை. இந்தி பதுங்கியது மீண்டும் பாய்வதற்காக என்றுதான் சொல்லவேண்டும். 1949-இல் இந்தியா விடுதலையடைந்த பின்னர் 'இந்தியே இந்தியப் பொதுமொழி' எனும் அரசியலமைப்புப் பட்டயத்தோடு இந்தி உலா வரத் தொடங்கியது. வெறும் சமுதாயச் சீர்திருத்த இயக்கமாக மட்டும் இருந்து சாதிப்பதைவிட அரசியல் இயக்கமாக இருந்து சிறப்பாகப் பணியாற்ற முடியும் எனும் நம்பிக்கையில்தான் தி.மு.கழகம் தோன்றியது அதுவும் 1949-இல் தான். 1965 சனவரி 26 முதல் இந்தி இந்திய அரசியல் மொழி யாக வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்தமையால் அதற்கு முந்திய நாளே கிளர்ச்சி தொடங்கப்பட்டது. முதற் போராட்டத்தில் பொதுமக்களும், புலமக்களும் கலந்து கொண்ட நிலை; இந்த இரண்டாவது போராட்டத்தில் பொது மக்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர். இதில் சின் னச்சாமி முதலாகப் பத்துக்கு மேற்பட்டோர் தீக்குளித்து இறந்தனர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பக்தவத்சலம் ஆட்சியில் துப்பாக்கிக் குண்டுகட்குப் பலியானார்கள். மிகப் பெரிய உயிரிழப்பையும், கடுமையான சேதத்தையும் உண் டாக்கிய போராட்டமாக இது அமைந்துவிட்டது. இதன் விளைவு 1967-இல் காங்கிரசு ஆட்சி தோல்வியடைந்து அண்ணாவின் ஆட்சி தொடங்கியது.