________________
67 கலைஞர் மேல் காதல் கொண்டேன் இந்தித் திணிப்புக்கு ஒரு முடிவு கட்டப்படும் எனும் நம்பிக்கை பிறந்தது. எனினும் 1967 இறுதியில் இந்திய அரசு எடுத்த முடிவுகளின்படி 1968 சனவரி 26-க்குள் இந்திக்கு வலிமையான வாய்ப்பும், மீண்டும் இந்தித் திணிப்பு முயற்சி தொடரும் என்னும் நிலையும் ஏற்பட்டன. 1968 சனவரியில் மாணவர்கள் மீண்டும் கொதித்தெழ வேண்டியதாயிற்று. எனினும் 1968 சனவரி 26-க்கு முன்பே அண்ணா கொண்டு வந்த 'இருமொழிச் சட்டம்' இந்தப் போராட்டத்தை தேவை யில்லாமல் செய்துவிட்டது. அதன் பின் 1975 வரை இந்தித் திணிப்பு நம்மைப் பாதிக்காத வகையில் தடைபட்டுக்கிடந்தது. 1976-ல் 'மிசா' தந்த வாய்ப்பு ஒருபுறம்; அதனைத் தொடர்ந்து 1977-ல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின் சில காலம் இந்தி தயங்கி நின்றது. ஆனால் 1981-க்குப் பின் தமிழக ஆட்சியே நடுவண் அரசின் கிளை போலச் செயற்படத் தொடங்கியது. இன்றோ இராசீவ் பிரதமராக உள்ள இந்த நேரத்தில் தமிழக முதல்வர் முற்றிலும் பிரதமருக்குக் கட்டுப் பட்டு அடிமையாட்சியே நடத்தி வருகிறார். 'பிரதமர் இராசீவ் தமிழகத்தைப் பொறுத்தவரையில் தன் கட்சிப் பிரமு கர்களைவிட எம்.சி.ஆர். மீதே அதிக நம்பிக்கை வைத்துள் ளார்' என்று 'இல்லஸ்ட்ரேடட் வீக்லி' எனும் இதழ் அண்மை யில் குறிப்பிட்டிருப்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இந்த நிலையில் 'இந்தித் திணிப்பு' மேளதாளத்துடன் பட்டுக்கம்பள வரவேற்புடன் நடைபெறுகிறது. தமிழக அரசோ ஒப்புக்கு ஒரு தீர்மானத்தைப் போட்டுவிட்டு உண் மையில் தமிழக மக்களின் உணர்வைப் புலப்படுத்த அஞ்சுகி றது. 'மொழிக்கு வளர்ச்சி தேடுகிறோம்' என விழாக்களை மட்டும் காட்டிவிட்டு, மொழி எக்கேடு கெட்டாலும் கெடட் டும் எனும் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.