உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 68 இந்த நிலைமையில்தான் அரசியல் சட்டத்தின் 17- ஆவது பிரிவில் நமக்கு உடன்பாடில்லாத வாசகம் அமைந்த தாளைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று நமது மேடைகளில் பேசப்படு கிறது. இதுவே நமக்குக் கேவலம்தான் என்பது என் கருத்து. 1968-ல் அடித்த அடியிலேயே இந்தப் போராட்டம் முடிய வில்லை என்பதும் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வேலை முன்னைவிடக் கடுமையாகி உள்ளது என்பதும் உண்மை. நடுவண் அரசின் ஆதிக்க மனப்பாங்கையும், தமிழக அரசின் பழிவாங்கும் போக்கையும் ஒரே நேரத்தில் எதிர்க்க வேண் டிய பொறுப்பும் இயக்கத்திற்கு உள்ளது. மாணவர்கள் கிளர்ச்சியில் இறங்கியுள்ளார்கள் என்றாலும் 1965 போல என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் 20-க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஒரு மூடு உந்தோடு (வேன்) வந்து காத்து நிற்கின்றனர். மாணவர்களிடத்திலும் பண்டு போல் எழுச்சி இல்லை. பொதுமக்களோ சொல்லவே வேண்டாம். அவர்கள் பொழுதுபோக்கிலும், திரைப்பட அரங்குகளிலும், சாராயக் கடைகளிலும் மயங்கிக் கிடக்கி றார்கள். அவர்களுக்குத் தாய்மொழியின் அருமை பெருமை கள் மறந்து போய்விட்டன என்றே சொல்லலாம். இந்நிலையில் நான்காவது பெரும் போராட்டத்தை நடத்திவரும் தி.மு.கழகத்திற்கும், துணை செய்யும் திராவி டர் கழகத்திற்கும் மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. ஆங்கிலத்தைப்போல் இந்தியும் நமக்கு அயல்மொ ழியே என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆங்கிலம் அயல்மொழியெனின் இந்தியும் ஏனை மொழி பேசுவார்க்கு சிறப்பாக திராவிடர்க்கு அவருள்ளும் சிறப்பாகத் தமிழர்க்கு அயன்மொழியே. இந்தி இந்திய