________________
ஆக்கியோன் உரை 'கலைஞர் மேல் காதல் கொண்டேன்!' என்பது நூல் தலைப்பு. ஆம்! தலைவரது தலைமைக்குக் கட்டுப்பட்ட தொண்டனாயினும் அவரது எழுத்தை எண்ணிப்படித்து நெஞ்சில் வைத்து மேடை தோறும் நயம்பட எடுத்துரைத்து, அவரது கலையைச் சுவைத்து வரும் எனக்கு அவரது எழுத் தில், பேச்சில், தலைமையில், பன்முக ஆற்றலில் ஒரு மயக்கம்! அதையே காதல் ஆக்கிக் கொண்டேன். மேலும் தலைவர் அவர்கள் என்மீது வைத்த அன்பும், நம்பிக்கையும் அவரது எழுத்திலும், பேச்சிலும் எப்படிப் புலப்படுத்தப்படு கின்றன என்பதையும் உலகத்துக்கு நான் உரைத்தாக வேண் டுமே! எனவே இரண்டும் கலந்த கவிதை, கட்டுரை, உரை, விளக்கம் ஆகியவற்றைக் கால நிரல்படி (chronological order) தந்துள்ளேன். உறவும் நெருக்கமும் எப்படி வளர்கின்றன என்பதை விளக்க இந்த அமைப்புத் தேவை! குடத்தில் இருந்த என்னைக் கோட்டை வரைக்கும் கொணர்ந்து கோடித் தமிழர்களிடமும் அடையாளம் காட்டிய அண்ணல் நாற்பது காணி நிலமே ஆட்சி எல்லையாகக் கொண்ட என்னைச் சட்டமன்றத்தின் ஆட்சி வரைக்கும் உயர்த்திய கோமான் தலைவர் கலைஞர். அவரது சிறப்புகள் மேடையில் எடுத்துச் சொல்லப்படும்போது, இவற்றைத் தொகுத்து நூலாகத் தந்தால் பயன் விளையுமே என்று பலரும் கூறினர். விளைவு இந்த நூல். மேலும் என்னைக் கழகப் பேச்சாளனாக மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் தோழர்கள் எழுத்தாளனாகவும் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். தலைவர் என்னைப் பாராட்டிப் பேசியவற்றை வரிமாறாமல் தந்துள்ளேன். வை தற்புகழ்ச்சி பாட அல்ல. தலைவர் புகழ்ந்த வரிக ளைப் போற்றிப் பேணும் பாங்கு தொடர வேண்டும் என்ப