________________
69 கலைஞர் மேல் காதல் கொண்டேன் மொழியெனின், ஆங்கிலமும் இன்று ஆங்கிலோ இந்தியரின் மொழியாய் இருத்தலில் இந்திய மொழியே! ஆங்கிலம் பொதுமக்கள் மொழியாக முடியாதெனின் இந்தியும் தமிழகத்திலும் திராவிட நாடுகளிலும் வங்காளத்தி லும் பொதுமக்கள் மொழியாக முடியாததே" என்று அறிஞர் தேவநேயப் பாவாணர் கூறியுள்ள கருத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும். உலகத்தில் தொன்மை மொழிகளில் எல்லாமே வழக்கற் றுப் போக இன்றும் உலக வழக்கு, செய்யுள் வழக்கு எனும் இருவகையிலும் நிமிர்ந்து நிற்பது தமிழ் ஒன்றுதான். இந்தி மொழியின் முதல் இலக்கியமே கி.பி.1400-க்கும் 1490-க்கும் இடையில் வாழ்ந்த இராமானந்தர் இராமசரிதம் பற்றிப் பாடிய பாடல்களை உள்ளடக்கியதே. இந்நிலையில் இந்த அரை வேக்காட்டு மொழியில் ஆயிரம் அவியல்கள்; அவசர அலங்காரங்கள்; ஆர்ப்பாட்ட அணிவகுப்புகள். இந்தி தொன்மையும் இலக்கியச் செம்மையும் உள்ள மொழியாக இருந்தாலும் தமிழன் அதை ஒருநாளும் ஏற்க மாட்டான்; அப்படியிருக்கும்போது செல்வ மொழிக்குரிய தமிழனா சில்லரை மொழியை ஏற்பான்? நேரு உறுதிமொழி சட்டமாக்கப்பட வேண்டும் என்பது ஒரு நிலை. அப்படியே சட்டமாக வந்தாலும் நாம் அயர்ந்து விடும் நேரத்தில், 'தமிழர்கள் விரும்பி ஏற்கிறார்கள்' என்று போலிக் காரணம் காட்டி இந்தியை நீட்டி விடுவார்கள். இப்போதே செயகாந்தனும், சிவசங்கரியும், நா.பார்த்தசாரதி யும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதாலும் அவர்களே மேடையில் இந்திக்கு வரவேற்புப் பா வாசிக்க வருகிறார்கள் என்பதாலும், பொதுமக்களே ஒப்புக்கொண்டதாக யாரும் மயங்கிவிட மாட்டார்கள்.