________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 70 70 கூலிக்கு மாரடிப்பவர்களும், பதவிக்காகச் சோரம் போகிறவர்களும் தமிழகத்தில் சங்க காலத்திலிருந்தே இருந் துதான் வந்திருக்கிறார்கள். எங்கள் காலத்திலும் சில பதர்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், 'செந்தமிழ்க்கே தீமைவந்த பின்னும் - இந்தத் தேகம் இருந்தொரு லாப முண்டோ எனும் பாவேந்தர் மொழியை நெஞ்சில் ஏந்திய தமிழன் ஒருநாளும் தோற்றுப் போக மாட்டான். இது உறுதி. மேலும், தமிழையும் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் எனும் வேண்டுகோள் நம் உணர்வுக்கும், ஒரு மைப்பாட்டைக் கட்டிக்காக்க விரும்பும் தமிழர்களின் கோட் பாட்டுக்கும் உகந்தது என்றாலும் நடுவண் அரசின் செவியில் இது ஏறவே ஏறாது. வெறியோடு பாய வரும் இந்திக்கு முன் நெறியோடு எடுத்துச் சொன்னால் என்ன நடக்கும்? மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைக்குள் மாதவம் மேற்கொண்டுள்ள மறவர்களின் போராட்டம் வென்றே தீரும்.